ராஜூவ் மேனன் படத்தை முடித்த ஜி.வி.பிரகாஷ்

0

ராஜூவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் – அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகி வரும் `சர்வம் தாள மயம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #SarvamThaalaMayam #GVPrakashKumar
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான நாச்சியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. அதில் ஜி.வி.பிரகாஷின் நடிப்புக்கு பாராட்டு கிடைத்தது.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அடுத்ததாக செம, குப்பத்து ராஜா படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இந்நிலையில், ஜி.வி. தற்போது, 4ஜி, ஐங்கரன், அடங்காதே, 100% காதல், சர்வம் தாள மயம், ஆதிக்குடன் ஒரு படம், ரெட்ட கொம்பு, கருப்பர் நகரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராஜூவ் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்வம் தள மாயம் படத்தின் படப்பிடிப்பு மேகாலயாவில் நிறைவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

17 வருடங்களுக்கு பிறகு ராஜூவ் மேனன் இயக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக `8 தோட்டாக்கள்’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார். நெடுமுடி வேணு, வினீத், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மைண்ட்ஸ்கிரீன் சினிமாஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி யாதவ் ஒளிப்பதிவு பணிகளையும், அந்தோணி படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar

Share.

About Author

Comments are closed.