பெண்ணாக மாறிய அனிருத் – வைரலான புகைப்படம்

0

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தற்போது பெண்ணாக வேடம் அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. #Anirudh

நடிகர்கள், நடிகைகள் தங்களது புகைப்படங்களை அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஒரு சிலர் போட்டோ ஷூட்டுங்கள் எடுத்து வெளியிடுவார்கள். அந்த வரிசையில் தற்போது அனிருத்தும் இணைந்திருக்கிறார்.

முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், சமீபத்தில் ஒரு போட்டோ ஷூட் ஒன்றை நடத்திருக்கிறார். அப்போது பெண் வேடம் அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.யார் இந்த பெண்.. புதுமுக நடிகையா… என்று அனைவரும் சிந்திக்கும் நிலையில், அனிருத் தான் என்று ஒரு சிலர் கூறியதால்தான், கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. தற்போது இந்த புகைப்படம் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

Share.

About Author

Comments are closed.