தளபதி 62 – வலுசேர்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்

0

`துப்பாக்கி’, `கத்தி’ படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த படத்திற்கு ஏ.ஆர்.முருகதாஸ் மேலும் வலுசேர்ப்பதாக கூறப்படுகிறது. #Vijay62 #Thalapathy62

`துப்பாக்கி’, `கத்தி’ படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மூன்றாவது முறையாக மீண்டும் இணைந்திருக்கின்றனர். `துப்பாக்கி’ படத்தில் இராணுவ வீரர்களின் தியாகம் பற்றியும், `கத்தி’ படத்தில் தண்ணீர் மற்றும் விவசாயம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்த முருகதாஸ். இந்த படத்தில் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை கையில் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

அதில், விவசாயம், அரசியல் முக்கிய பங்காற்றுவதாகவும் அதற்காக வலுவான வசனங்களுடன் விஜய், ஆக்ரோஷமாக வலம் வருவார் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே `மெர்சல்’ படத்தில் விஜய் பேசிய வசனங்களால் பிரச்சனை கிளம்பிய நிலையில், இந்த படமும் ஒரு அழுத்தமான கதையுடன் உருவாகுவதாக கூறப்படுகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்திலும், பழ.கருப்பையா, ராதாரவி எதிர்மறை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இவர்களுடன் யோகிபாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. #Vijay62 #Thalapathy62

Share.

About Author

Comments are closed.