செக்கச் சிவந்த வானம் – படப்பிடிப்பில் கலந்து கொண்ட நாயகி

0

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பில் நடிகை அதிதி ராவ் ஹிடாரியும் இணைந்திருக்கிறார். #CCV #AditiRaoHydari

`காற்று வெளியிடை’ படத்தை தொடர்ந்து மணிரத்னம் தற்போது `செக்கச் சிவந்த வானம்’ படத்தில் பிசியாகி இருக்கிறார். அரவிந்த்சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே அரவிந்த்சாமி, சிம்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில், `காற்று வெளியிடை’ படத்தில் நடித்த அதிதி ராவ் ஹிடாரியும் சமீபத்தில் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார்.

இந்த படத்தில் நாயகர்கள் 4 பேரும் சகோதரர்களாக நடிப்பதாக கூறப்படுகிறது. தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு மற்றும் கழிவு, அதனால் ஏற்படும் பிரச்சனை பற்றி அலசும் படமாக இந்த படம் உருவாகி வருகிறதாம்.

ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா, பிரகாஷ்ராஜ், தியாகராஜன் மற்றும் மன்சூர் அலி கான், சரத் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசைமைக்கிறார். #CCV #AditiRaoHydari

Share.

About Author

Comments are closed.