சன்னி லியோன் வாழ்க்கையை படமாக்குகிறார்களாம்; கரேன்ஜிட் டு சன்னி!

0

பாலிவுட்டில் சில படங்கள் பாடல்கள் என்று நடித்து வந்தவர் தான் சன்னி லியோன். தமிழில் பாடல் காட்சிகளில் மட்டும் நடித்து வந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் வீரமாதேவி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இவரை இந்த படத்தின் ஹீரோயினாக தேர்ந்தெடுக்க காரணம் இவர் இந்தியா முழுவதும் தெரிந்த முகம் என்பதால்.

இந்திய பிரபலமாக இவர் இருப்பதால் தான் ஒரே கதாநாயகியை வைத்து நான்கு மொழிகளிலும் படம் தயாரிக்க முடிகிறது என்று கூறினார் இந்த படத்தின் இயக்குனர். மேலும் தற்போது, சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு கரேன்ஜிட் டு சன்னி என்ற பெயரில் ஆவணப்படமாக தயாராகி வருகிறது.இவரின் நிஜ பெயர் கரேன்ஜிட் கவுர் வோஹ்ரா என்பதால் தான் கரேன்ஜிட் டு சன்னி என்று இவரின் வாழ்க்கையை படமாக்க முடிவு செய்து ஜீ டிவி குழுமம் இந்தபடத்தை தயாரிக்கிறது. சன்னி லியோன் எப்படி ஆபாச நாயகியானார் என்பதை தெரியப்படுத்தும் விதமாக இந்த படம் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.

About Author

Comments are closed.