ஆலியா பட் இடத்தை பிடித்த பிரியா வாரியர்! முன்னணி ஹீரோவிற்கு ஜோடியாகிறார்..

0

ஒரே ஒரு டீசரில் இந்தியா முழுவதும் ஒரே இரவில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். தற்போது தான் முதல் படத்தில் நடித்து வரும் அவர் அடுத்து ஒரு முன்னணி பாலிவுட் ஹீரோவுடன் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரன்வீர் சிங் அடுத்து நடிக்கவுள்ள Simmba படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா வாரியர் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர் நடித்த டெம்பர் படத்தின் ரீமேக் தான் இந்த படம். இதில் முதலில் ரன்வீருக்கு ஜோடியாக ஆலியா பட் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது பிரியா வாரியர் அவரை முந்தி அந்த இடத்தை கைப்பற்றியுள்ளார்.

Share.

About Author

Comments are closed.